பலாங்கொடையில் இடம்பெற்ற கோர விபத்து : பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்!
பலாங்கொடை வெலிகேபொல வீதியில் பொதுப் பரீட்சை முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் பாரவூர்தியின் இரும்புக் குழாய்கள் சில பேருந்துக்குள் வீசப்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பலாங்கொடை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மாகாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எஓலமுர பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸும் பலாங்கொடையில் இருந்து வெலிகேபொல நோக்கி சென்று கொண்டிருந்த இரும்பு குழாய் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் சாரதியின் கவனயீனமான வாகனம் மற்றும் ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பஸ் மற்றும் டிப்பர் வாகனத்தின் சாரதிகள் இருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.