மனித கடத்தல் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு : குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகள்!
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்திற்காக இலங்கையின் முப்படைகளின் ஓய்வுபெற்ற உறுப்பினர்களை சட்டவிரோதமாக ஈடுபடுத்திய மனித கடத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விசேட பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவுக்கு இதுவரை 77 தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விசேட பிரிவு கடந்த வியாழன் இரவு ஆரம்பிக்கப்பட்டதுடன், 36 மணித்தியாலங்களுக்குள் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் புறப்பட்ட அந்நாட்டின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின், அவர்கள் புறப்படும் திகதிகள், ஒருங்கிணைந்த நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களை அளிக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
மேலதிக தகவல்களை 011-2 44 11 46 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியும் எனவும், இதுவரை தகவல் வழங்காதவர்கள் இருப்பின் அவதானம் செலுத்துமாறும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.