ராகம பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வீதித்தடையை பயன்படுத்தி போக்குவரத்தை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது ராகம வல்பொல பட்டாலியன் பகுதியில் இருந்தது காரில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு 102 கிராம் 940 மில்லிகிராம் ஹெரோயின் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேக நபர் 'பாஸ் ரொஷான்' எனப்படும் ராகம கண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.