இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
#America
#people
#Attack
#Israel
#Warning
Prasu
1 year ago

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில் வடக்கு மற்றும் மத்திய காசா பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.
இதற்கிடையே ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் ரபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், பொது மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தது.



