ஏமனின் தெற்கு கடல் பகுதியில் இரு வெடிப்பு சம்பவங்கள் பதிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஏமனின் தெற்கு கடல் பகுதியில் இரண்டு குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏடனுக்கு தெற்கே சுமார் 82nm தொலைவில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக பிரித்தானிய கடல்சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
கப்பல் மற்றும் பணியாளர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஹூதி குழு இன்னும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் சந்தேகம் இயல்பாகவே அவர்கள் மீது விழுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனை தளமாகக் கொண்ட, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு அல்லது அங்கிருந்து பயணம் செய்யும் எந்தவொரு கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.



