கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி உக்ரைனை தாக்கிய ரஷ்யா! 05 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஹாரி பாட்டர் கேசில் என்ற கல்வி நிறுவனமும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை நடத்த ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த 30 பேரில் இரண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 20 குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.