சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் மரணம்

#China #Death #people #Flood #HeavyRain
Prasu
1 year ago
சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் மரணம்

தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளது.

குவாங்டாங்கின் ஷென்சென் மெகாசிட்டி பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஷாவோகிங் நகரில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் 2 நகரங்கள் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கடை வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 1,500 ஹெக்டேர் விளைநில பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!