மலேசியாவில் இராணுவ பயிற்சியின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் : 10 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மலேசியாவில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு கடற்படையின் கொண்டாட்டத்துக்கான ஒத்திகையின் போது, இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது.
ஒரு ஹெலிகாப்டர் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதாகவும் மற்றையது அருகில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
விபத்தின் போது இரண்டு ஹெலிகாப்டர்களிலும் சுமார் 10 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவின் லுமுட் என்ற இடத்தில் கடற்படைத் தளம் அமைந்துள்ள இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



