அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலி
#Death
#Police
#America
#GunShoot
#Rescue
Prasu
1 year ago

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் , மெம்பிஸில் உள்ள ஆரஞ்சு மவுண்ட் பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அலறியடித்தப்படி ஓடினார்கள்.
துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.16 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



