பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள்!
#SriLanka
#strike
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நாளை (22.04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக ஆதரவளிக்கும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்குமாறு தேயிலை தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ள போதிலும், அந்த சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட கம்பனிகள் சம்மதிக்காததை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



