ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து : 07 பேர் மாயம்!

#SriLanka #Japan #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து : 07 பேர் மாயம்!

பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பானிய ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின்போது பிரிதொரு ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குறித்த ஹெலிகாப்டரில் 08 பேர் பயணித்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 07 பேரை தேடி வருவதாகவும், மீட்பு பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

கடல்சார் தற்காப்புப் படையைச் சேர்ந்த இரண்டு SH-60K ஹெலிகாப்டர்கள் தலா நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றதாகவும், டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் இரண்டு ஹெலிகாப்டர்களும் தண்ணீரில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம்  என்று ஊகிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!