உக்ரைனுக்கு கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர்கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பிடனின் முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது.
எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த பொதியை நிறைவேற்றுவதற்கு பிரதிநிதிகள் சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தொகுப்பு அமெரிக்காவை வளப்படுத்தும் மற்றும் உக்ரைனை மேலும் அழிக்கும் என்று கூறினார்.