உங்கள் பெயர் “D” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#Astrology #people #Letters #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயர் “D” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. 

அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. 

ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.

images/content-image/1713564956.jpg

D என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்....

D என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு தன்னை சுற்றி இருக்கும் எல்லாமே அமைதியாக, நிம்மதியாக மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். 

அவ்வாறு இல்லை என்றால் அதை அடைவதற்கு இவர்கள் கடினமாக உழைப்பார்கள். குழப்பமான சூழலை விரும்பவே மாட்டார்கள். எப்படியாவது நிம்மதி வேண்டும் என்று பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடுவார்கள்.

இவர்களுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு குறிக்கோள் இருக்கும், அதை நோக்கி திட்டமிட்டு செயல்படுவார்கள். கிட்டத்தட்ட பூஜ்யம் போல தோன்றும் இந்த எழுத்தின் தன்மை, சில இடங்களில் இவர்களிடம் வெளிப்படும். 

images/content-image/1713564968.jpg

ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறப்பு எடுத்திருக்கிறோம் என்ற எண்ணம், இந்த எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். அதை புரிந்து கொள்ளும் வரை கடினமாக உணர்வார்கள், வாழ்க்கை சூன்யம் போல தோன்றும். 

D என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடன் இருப்பவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

இந்த எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு பெயர் வைத்திருப்பவர்கள் empaths என்று கூறப்படும் மற்றவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள். 

ஒரு சூழல் கடினமாக இருந்தாலும் சரி, அல்லது மிக மிக மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் மனதில் இருப்பதை இவர்களால் மற்றவர்களின் உணர்வுகளை இவர்களால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

மிகவும் பிராக்டிகலாக செயல்படுவார்கள். இதயபூர்வமாக சிந்திப்பது, கனவுலகில் சஞ்சரிப்பது, பகல் கனவுகள், படைப்பாற்றல் என்று எந்த விஷயமாக இருந்தாலுமே, இவர்கள் நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்கள். எது நடக்கும், எது நடக்காது என்பதை இவர்களால் சரியாக கணித்துவிட முடியும். 

images/content-image/1713564992.jpg

அதுமட்டுமல்லாமல் இவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களை நம்பி எந்தவித ரகசியங்களையும் தைரியமாக பகிர்ந்து கொள்ளலாம். நான் எதற்காக பிறந்தேன் என்பதற்கான விடையே இவர்கள் தேடிக் கண்டுபிடிப்பதால், இவர்கள் பொதுவாகவே பொறுமைசாலிகள். 

பலவிதமான நெருக்கடிகள், சவால்கள் மற்றும் அவமானங்களை இவர்கள் எதிர்கொண்டிருப்பார்கள். நிறைய தடைகளை சந்தித்தவர்கள் மிகவும் பணிவாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். இவர்களை போல பொறுமைசாலியை பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். 

ஆனால் இவையே இவர்களுக்கு எதிரியாக மாறிவிடும், கிண்டலுக்கு ஆளாவார்கள். சில நேரங்களில் இவர்களுடைய பொறுமை மற்றவர்களை பயங்கரமாக சோதிக்கும்.

images/content-image/1713565057.jpg

  • சில நேரங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள்
  • அமைதியான சூழலையே விரும்புவார்கள்
  • மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்வார்கள்
  • சரியான முடிவெடுப்பதில் தேர்ந்தவர்கள்
  • நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்கள்
  • அவ்வளவு எளிதாக மற்றவர்களின் பேச்சை கேட்டு நடக்க மாட்டார்கள்
  • சுயநலம் இல்லாதவர்கள் போட்டித்தன்மை நிறைந்தவர்கள்
  • தோல்வி, சவால்களை 
  • தைரியமாக எதிர்கொள்வார்கள்
  • பொறுமை மிக மிக அதிகம்
  • அன்பு, கனிவு, அர்பணிப்பு எல்லாமே அதிகம்