ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணையமாட்டார்கள் : அசோக் அபேசிங்க!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.