அமெரிக்காவில் காவலில் இருந்த இந்தியர் மரணம்
#Death
#America
#Migrant
#Indian
#illegal
Prasu
1 year ago

இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (வயது 57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அட்லாண்டாவின் செயின்ட் மேரிஸ் நகரில் உள்ள தென்கிழக்கு ஜார்ஜியா சுகாதார நிலையத்தில் கடந்த 15-ம் தேதி ஜஸ்பால் சிங் மரணம் அடைந்துள்ளார்.
அவர் மரணம் அடைந்த செய்தி, நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங் மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.



