இரண்டு மாதங்கள் காத்திருந்து, சரியான திட்டமிடல்களுடன் ஈரானை தாக்கிய இஸ்ரேல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இரண்டு மாதங்கள் காத்திருந்து, சரியான திட்டமிடல்களுடன் ஈரானை தாக்கிய இஸ்ரேல்!

இரண்டு மாத திட்டமிடலுக்குப் பிறகே  சிரியாவில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்நாட்டு இஸ்ரேலிய பாதுகாப்பு பதிவுகள் வான்வழித் தாக்குதலை இஸ்ரேலிய போர் அமைச்சரவை ஒரு வாரத்திற்கு முன்பே அங்கீகரித்ததைக் காட்டுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

சிரியா மற்றும் லெபனானுக்கான ஈரானின் குத் படைத் தளபதி முகமது ரேசா சஹேதியைக் கொல்லும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேவேளை இந்த தாக்குதலில் 02 மூத்த தளபதிகள் உள்பட 07 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது. இருப்பினும் இது குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  

இதனையடுத்தே இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் அதிகரித்துள்ளது.  இதற்கிடையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து,  தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்காவிற்கு நோட்டீஸ் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!