முல்லைத்தீவில் - தொலைத்தொடர்பு கம்பங்களை துவம்சம் செய்த காட்டு யானை

#SriLanka #Elephant #Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவில் - தொலைத்தொடர்பு கம்பங்களை துவம்சம் செய்த காட்டு யானை

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

 வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது. 

images/content-image/2024/04/1713421026.jpg

சம்பவ இடத்திற்கு சென்று திருத்தல் பணிகளை மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

images/content-image/2024/04/1713421042.jpg

 அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும் , பயிர் நிலங்களை சேதப்படுத்துவதுமான நிலை ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/04/1713421061.jpg

images/content-image/2024/04/1713421093.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!