களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ஒரு வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் பல நாட்களாக அங்கு வரவில்லை எனவும், வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய அங்கு சென்ற பொலிஸார் குறித்த இரு பெண்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர். 

கிராம அலுவலரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 65 மற்றும் 79 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  

சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் நாளை (18.04) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!