இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதலில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுமா?
#SriLanka
#War
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இஸ்ரேல் மீது ஈரான் முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் இரு நாடுகளிடையே நேரடி போர் மூளும் அபாயம் உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இஸ்ரேலிடம் சொந்தமாக அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
அதேசமயம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. ஈரானிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஆனால் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



