இஸ்ரேலுக்காக போர் விமானங்களை அனுப்பிய பிரித்தானியா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஈரானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பிரித்தானிய போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான ஜெட் விமானங்கள் இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
குறித்த வான்வெளியில் பாதுகாப்புக்காக ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரச இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.
நேற்று (13.4) மற்றும் இன்று (14.4) காலை ஈரான் பல வான்வழி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.