கலிஃபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிப்பு!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கலிஃபோர்னியாவில் குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவருக்கு 15 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த பெண் குடிபோதையில் வாகனம் செலுத்தி கர்பிணி ஒருவர் மீது மோதியுள்ளார். இதில் கர்பிணி பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய 44 வயதான கோர்ட்னி பண்டோல்ஃபி, என்ற பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



