இஸ்ரேலின் சரக்கு கப்பலை கைப்பற்றிய ஈரான்!
#SriLanka
#Israel
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஓமான் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியுள்ளது. போர்த்துகேய கம்பனிக்கு சொந்தமான “MSC ARIES” எனும் பெயர் கொண்ட கப்பலை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரானிய விசேட ராணுவம் ஹெலிகொப்டரில் சென்று கைப்பற்றியுள்ளதாக பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தகம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஃபுஜைரா துறைமுகத்திலிதுந்து சுமார் 50 கிலோமீறறர் தொலைவில் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் டுபாயிலிருந்து இந்தியா நோக்கி பயணித்த வேளையிலேயே ஈரானின் விசேட ராணுவ பிரிவினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று குறித்த கப்பலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.