பிலிப்பைன்சில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் - இருவர் பலி
#Death
#Crash
#Phillipines
#Soldiers
#Helicopter
#Military
Prasu
1 year ago

பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன.
இதற்காக சாங்கி விமான நிலையத்தில் இருந்து கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.
ஆனால் புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இதனையடுத்து ராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.



