போலந்தில் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Poland
Thamilini
1 year ago
போலந்தில் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்!

போலந்து அரசாங்கம் குறைந்த வகுப்புகளில் வீட்டுப்பாடத்தின் அளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் இசை மற்றும் ஓவியம் போன்ற ஏனைய விடயங்களை கற்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கூறியுள்ளார்.

பிரதம மந்திரி டொனால்ட் டஸ்கின் அரசாங்கம், இந்த மாதம் போலந்தின் கல்வி முறையை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு பரந்த விவாதத்தின் மத்தியில் வீட்டுப்பாடத்திற்கு எதிரான தடையை அறிவித்துள்ளார்.

இந்த ஆணையின்படி, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இனி தேவையான வீட்டுப்பாடம் கொடுக்க மாட்டார்கள்.

அதேபோல் நான்காம் முதல் எட்டாம் வகுப்புகளில், வீட்டுப்பாடம் இப்போது விருப்ப தெரிவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!