போருக்கு ஆயத்தமாக வேண்டும் - வட கொரியா ஜனாதிபதி
#NorthKorea
#War
#President
#Nuclear
#Research
Prasu
1 year ago
வட கொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் இவர், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது என வடகொரியா கூறியிருந்தது.
இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார்.
அதன்பின் அவர் பேசியதாவது:
வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என தெரிவித்தார்.