ஸ்பெயினில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம்
#Parliament
#Law
#Foriegn
#Spain
#Workers
Prasu
1 year ago
ஸ்பெயினில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வாழும் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதி அல்லது வதிவிட அனுமதி வழங்கும் சட்டத்தை பரிசீலிக்க ஸ்பெயினின் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
700,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் மற்றும் சுமார் 900 அமைப்புகளின் ஆதரவைப் பெற்ற பின்னர், குடிமக்கள் முன்முயற்சியால் மாட்ரிட்டில் உள்ள பிரதிநிதிகள் காங்கிரஸ் மூலம் இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
சட்டமியற்றுபவர்கள் 3தீவிர வலதுசாரி VOX கட்சி மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தது10-33 என்ற அடிப்படையில் இந்த முன்மொழிவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டனர்.
இந்தச் சட்டம் தற்போது பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு விவாதிக்கப்படும்.
இதன்படி நவம்பர் 1, 2021 க்கு முன்னர் ஸ்பெயினுக்கு வந்த வெளிநாட்டவர்கள் இதன் மூலம் நன்மையடைவர்.