அமெரிக்காவில் 22 வருடங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட தண்டனை
#Student
#Murder
#Court Order
#America
#GunShoot
Prasu
1 year ago
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.