தைவான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு

#Death #Hospital #people #Earthquake #Thaiwan #Rescue
Prasu
1 month ago
தைவான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு

தைவான் தலைநகர் தைபே நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.

இது 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1999-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 100 முறை அங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. 

எனவே மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 1,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அங்குள்ள ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. 

இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எ

னவே அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இருந்த தொட்டில்கள் உருண்டு சென்றன. 

அதனை அங்கிருந்த செவிலியர் இழுத்து பிடித்து அவர்களது உயிரை காப்பாற்றினர். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அந்த நர்சுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.