மீன ராசியினருக்கு குடும்ப விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 weeks ago
மீன ராசியினருக்கு குடும்ப விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: பண வரவில் இருந்த தடை விலகும். முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். செயல்களில் லாபம் காண்பீர். பணம் பல வழிகளிலும் வரும். கார்த்திகை 1: லாப சந்திரனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளால் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். திருவாதிரை: நினைத்ததை செய்து முடிப்பீர். வெளிநாட்டு தொடர்பு லாபமாகும். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். நிதி நிலை அதிகரிக்கும் நாள்.பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்.ஆயில்யம்: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். பொருள் சேர்க்கை ஏற்படும்.பூரம்: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் அகலும். உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும்.சித்திரை 1,2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்.

துலாம்

சித்திரை 3,4: பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். சுவாதி: உறவுகளால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்திற்குள் கருத்து பேதம் உண்டாகும். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். தொழிலில் இருந்த தடை விலகும்.கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:

மூலம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பூராடம்: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர். நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் முயற்சி லாபம் தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டி விலகும். வருமானம் உயரும்.திருவோணம்: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வர். மனக்குழப்பம் விலகும்.சதயம்: எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும். பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். முதலாளியால் பாராட்டப்படுவீர்.

மீனம்

பூரட்டாதி 4: மற்றவர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி தோன்றும்.உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். பயணத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.