சொத்துக்குவிப்பு வழக்கில் பெரு ஜனாதிபதியிடம் விசாரணை

#Women #President #Peru #Case #assets
Prasu
1 year ago
சொத்துக்குவிப்பு வழக்கில் பெரு ஜனாதிபதியிடம் விசாரணை

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பெண் அதிபராக டினா பொலுவார்டே பதவியேற்றார். 

இந்தநிலையில் அவர் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆடம்பர கைகடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்கி குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிபர் மாளிகை மற்றும் டினா பொலுவார்டே வீடுகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத பலகோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அரசு வக்கீல்கள் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய டினா பொலுவார்டே மந்திரிசபையை கலைத்து புதிதாக 6 மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வலியுறுத்தி பெருவில் நாடுதழுவிய போராட்டம் நடக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!