தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரு இந்தியர்கள் மாயம்
#Death
#Earthquake
#Thaiwan
#Missing
#Indian
Prasu
1 year ago

தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன. இதில் 9 பேர் பலியானார்கள். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே நிலநடுக்கத்தில் ஓட்டல் ஊழியர்கள் 42 பேர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



