ரிஷப ராசியினருக்கு தந்தையின் ஆலோசனை நன்மை தரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 weeks ago
ரிஷப ராசியினருக்கு தந்தையின் ஆலோசனை நன்மை தரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். தொழில் புரியும் இடத்தில் சில மாறுதல் செய்வீர்.பரணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்திருந்த செயல் நிறைவேறும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல் மற்றவர்களால் புகழப்படும்.மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நேற்று இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர்.புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நீங்கள் நினைத்தது நிறைவேறும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் வெற்றியாகும்.பூசம்: வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.ஆயில்யம்: பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை அடைவீர். முயற்சியில் முன்னேற்றம் தரும். 

சிம்மம்

மகம்: திட்டமிட்டு நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர். இழுபறியாக இருந்த பிரச்னையில் சாதகம் உண்டாகும்.பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் அகலும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிரி தொல்லை விலகும்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். உங்கள் முயற்சி பலிதமாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர் என்றாலும் எதிர்பார்த்த வரவில் இழுபறி ஏற்படும்.அஸ்தம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சித்திரை 1,2: தேவையற்ற செலவு உண்டாகும். குடும்பத்தில் ஒருவரின் விருப்பம் நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர். உங்கள் முடிவு லாபத்தை உண்டாக்கும்.விசாகம் 1,2,3: உறவினர்கள் வழியில் சில சங்கடம் உண்டாகும். அதை சமாளித்து வெற்றி பெறுவீர். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். உறவினர்களால் சில சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். மூன்றாமிட சந்திரனால் மனக்குழப்பம் விலகும்.கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். 

தனுசு

மூலம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பணவரவால் நிறைவேறும். பூராடம்: முயற்சி தள்ளிப்போகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்.உத்திராடம் 1: நேற்றைய பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.திருவோணம்: தடைபட்டிருந்த செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் உயரும்.அவிட்டம் 1,2: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலை விரிவு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.சதயம்: சுப விசேஷங்களில் பங்கேற்பீர். செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பூரட்டாதி 1,2,3: செலவு வழியே நேற்றைய முயற்சி நிறைவேறும். செயல்களுக்கு உறவினர் உதவுவர். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக செயல்படுவீர்கள்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும்.