கானாவில் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மதபோதகர்

#children #wedding #School Student #Pastor #Ghana
Prasu
1 year ago
கானாவில் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மதபோதகர்

தென்னாப்பிரிக்காவின் கானா தேசத்தில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது. 

63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் விமர்சையாக திருமணம் செய்திருக்கிறார். 

அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.

குறிப்பிட்ட பிரிவின் மதவழிபாட்டுத் தலைவராக 63 வயதாகும் நுமோ போர்க்டே லாவ் ட்சூரு என்பவர் உள்ளார். இவர் 2 தினங்களுக்கு முன்னர்(ஏப்ரல் 30) கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயதாகும் சிறுமியை தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் பகிரங்கமாக திருமணம் செய்து உள்ளார். 

பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, அது அவருக்கு பெரும் விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது.

 கானா சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதே வேளையில், கலாச்சார நடைமுறை என கூறி நடத்தப்படும் குழந்தை திருமணங்களை தடை செய்கிறது. கானாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!