குல தெய்வ அருளால் முயற்சியில் லாபம் காணும் கன்னி ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
குல தெய்வ அருளால் முயற்சியில் லாபம் காணும் கன்னி ராசியினர் - ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.பரணி: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும் நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நேற்று இருந்த நெருக்கடி இன்று இருக்காது. உங்கள் முயற்சி பலிதமாகும். ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.திருவாதிரை: எங்கு சென்றாலும் எதிர்ப்பு தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும்.

கடகம்

புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன ஒரு செயலை நடத்த முயல்வீர்கள்.பூசம்: நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும் நாள் ஆயில்யம்: உங்கள் விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நிதிநிலை உயரும்.

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: மனக் குழப்பம் நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் அகலும், துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உத்திரம் 1: மறைமுகத் தொல்லை தீரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குல தெய்வ அருளால் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும்.அஸ்தம்: உறவினர்கள் உதவியுடன் எதிர்ப்புகளை வெல்வீர். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் காண்பீர்.சித்திரை 1,2: தொழிலில் வருமானம் அதிகரித்து உங்கள் சங்கடம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு மற்றவர்களுக்கு தெரியவரும்.சுவாதி: நீண்ட நாள் சங்கடம் விலகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயல்களுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.அனுஷம்: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றும் நாள். கேட்டை: செல்வாக்கு வெளிப்படும். நீங்கள் விரும்பியவற்றில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

தனுசு

மூலம்: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினரை ஆலோசித்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.பூராடம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்.உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர். உங்கள் அந்தஸ்து உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.திருவோணம்: உங்கள் செயலில் தடுமாற்றம் ஏற்படும். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் உண்டாகும்.அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் குடும்பத்திற்காக திடீர் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும்.சதயம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர். வரவைவிட செலவு அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் தேவையற்ற செலவு...

மீனம்

பூரட்டாதி 4: வருமானம் அதிகரிக்கும். உங்கள் மனதில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி லாபமாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். புதிய நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.ரேவதி: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.