பால்டிமோர் பாலம் : மீட்பு பணிகள் இடைநிறுத்தம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பால்டிமோர் பாலம் : மீட்பு பணிகள் இடைநிறுத்தம்!

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததையடுத்து குப்பைகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டது. 

நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள  தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!