ரிஷப ராசியினருக்கு எதிர்பார்ப்புகள் எளிதாக பூர்த்தியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
ரிஷப ராசியினருக்கு எதிர்பார்ப்புகள் எளிதாக பூர்த்தியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் லாபம் தோன்றும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். பரணி: முயற்சி இழுபறியாகும். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாய நிலை ஏற்படும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வார்கள்.ஆயில்யம்: செயல்களில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் ஆதரவுடன் நீண்டநாள் முயற்சி ஒன்று அனுகூலமாகும்.

சிம்மம்

மகம்: உழைப்பில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவுவார்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்குள் சில பிரச்சினை தோன்றும்.அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

துலாம்

சித்திரை 3,4: பணவரவு அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு செயலில் வெற்றி அடைவீர்கள்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.விசாகம் 1,2,3: எதிர்பாராத வருவாயை அடைவீர்கள். நண்பர்கள் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். மனதை அலைபாய விடுவதால் சில சங்கடங்கள் தோன்றும்.அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தொழிலில் புதிய பாதை தெரியும். எதிர்ப்பு தோன்றினாலும் சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். திருவோணம்: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.சதயம்: உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இன்று நிதானம் தேவை. வார்த்தைகளால் சில சங்கடங்கள் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். உத்திரட்டாதி: உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ரேவதி: நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீ.