ஆப்கானிஸ்தானில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் மீளவும் கொண்டுவந்துள்ள சட்டம்!

#SriLanka #Afghanistan #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 weeks ago
ஆப்கானிஸ்தானில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் மீளவும் கொண்டுவந்துள்ள சட்டம்!

ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பகிரங்கமாக கல்லெறிந்து கொல்லும் தண்டனையை மீண்டும் அமல்படுத்த தலிபான் அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக தலிபான் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுன்சாடா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் மட்டும் தலிபான் அமைப்பின் செயல்பாடுகள் முடிவுக்கு வராது என்றும் தலிபான்களின் உச்ச தலைவர் தனது முடிவை அறிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமைகள் உலகளவில் மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.