மீன ராசியினருக்கு கவனக்குறைவால் பிரச்சனைகள் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மீன ராசியினருக்கு  கவனக்குறைவால் பிரச்சனைகள் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நண்பர்களால் ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். ரோகிணி: ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும்.மிருகசீரிடம் 1,2: அடுத்தவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் உண்டான குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.திருவாதிரை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர். ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும்.

சிம்மம்

மகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.உத்திரம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துப் போவது நன்மையாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னை உங்களுக்கு சாதகமாகும். அஸ்தம்: உங்கள் ஆற்றல் இன்று வெளிப்படும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள்.சுவாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.அனுஷம்: அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். செயல்களில் படபடப்பு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்

பூரட்டாதி 4: பணியிடத்தில் தேவையற்ற பிரச்னை உண்டாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் என்பதால் முயற்சியில் சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரேவதி: உங்கள் கவனக்குறைவால் சில பிரச்னைகள் தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.