உக்ரைனின் மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா!
#SriLanka
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உக்ரைனின் ஓர்லிவ்கா கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் ஓர்லிவ்கா (Orlivka) கிராமத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பதாக ஓர்லிவ்கா அருகே ஒன்பது ரஷ்ய இராணுவத் தாக்குதல்களை உக்ரைன் படைகள் முறியடித்ததாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படையினர் குறித்த கிராமத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே உக்ரைன் - ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தற்போது ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் புட்டின் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
இதனையடுத்து போர் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா பல சாதகமான பலன்களை அனுபவித்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம் உக்ரைனின் ஆயுத பலம் குறைவடைந்துள்ளதுமாகும்.



