IMF பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
IMF பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20.03) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் சமகி ஜன கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இலங்கையில் உள்ள 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் மற்றும் இலக்குகளை ஐக்கிய மக்கள் சக்தி  சாதகமாக ஏற்றுக்கொண்டாலும், சில பிரேரணைகள் திருத்தங்களுடன் அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!