தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயம்

#Parliament #Canada #AnuraKumaraDissanayake #Member #Visit #leader
Prasu
1 year ago
தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று கனடாவுக்கு புறப்படுகிறார்.

அதாவது, கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார். 

தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரிலும், இரண்டாவது சந்திப்பு 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரிலும் இடம்பெறவுள்ளது.

 இந்தப் பிரதான மக்கள் சந்திப்புகளுக்கு மேலதிகமாக கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!