பாகிஸ்தானில் சுரங்க வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் மரணம்

#Death #Pakistan #Blast #Mine #Chemical #Workers
Prasu
1 year ago
பாகிஸ்தானில் சுரங்க வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், காயமடைந்தோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!