கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம் : 29 பேர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் இன்று (20.03) நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. லஹிரு வீரசேகர மற்றும் துமிந்த நாகமு ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை ஆரப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில், 05 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.