வடக்கு ஆளுநரை சந்தித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர்!
#SriLanka
#NorthernProvince
#Governor
Mayoorikka
1 year ago

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நேற்று (19) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.



