புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் துலா ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும்  துலா ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பரணி: சொத்து விவகாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் இன்று தீரும். கார்த்திகை 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவு செலவு மகிழ்ச்சி தரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வந்துசேரும். திருவாதிரை: பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். சங்கடம் குறையும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். பூசம்: உங்கள் பேச்சாற்றலால் இழுபறியாக இருந்த ஒரு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். ஆயில்யம்: வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். உத்திரம் 1: உங்கள் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும். வேலையாட்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். அஸ்தம்: நண்பர்கள் உதவியுடன் செயலில் ஆதாயம் காண்பீர்கள். தொழில் முன்னேற்றமடையும். சித்திரை 1,2: தேங்கியிருந்த பொருட்கள் விற்பனையாகும். எதிர்பார்த்த வருவாயால் சங்கடங்கள் விலகும்.

துலாம்

சித்திரை 3,4: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுவாதி: மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்களும் குழப்பமும் விலகும். செயல்கள் இன்று லாபமாகும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். கேட்டை: எதிரிகளால் சங்கடம் தோன்றும். நினைத்ததற்கு மாறாக சிலவற்றில் பிரச்னைகள் உண்டாகும். 

தனுசு

மூலம்: மாலை வரை செயல்களில் லாபம் காண்பீர்கள். அதன்பின் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூராடம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். திருவோணம்: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அவிட்டம் 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். மனதில் பதட்டம் அதிகரிக்கும். சதயம்: குலதெய்வ அருளால் நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். தொழிலில் லாபம் கூடும். பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி இன்று பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். ரேவதி: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.