கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்றுவிப்பாளர் கைது!

#SriLanka #Gotabaya Rajapaksa #Arrest
Mayoorikka
1 year ago
கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்றுவிப்பாளர் கைது!

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த சந்தேகநபர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், யஹலதன்ன நெல்லிகல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர். 

ஹெரோயின் போதைப்பொருள் கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது வீட்டை சோதனை செய்த போது, ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!