அவசரமாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள்!
#Corona Virus
#SriLanka
#Parliament
Mayoorikka
1 year ago

பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில், செவ்வாய்க்கிழமை (19) காலை 9.30 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன.
அதன்பின்னர், இன்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அத்துடன், கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, முக்கிய கூட்டமொன்று நடத்தப்படவிருப்பதால், சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பிற்பகல் 11.15மணிக்கு அறிவித்தார்.



