விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் குழந்தையை கொலை செய்த பெண் ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து வாழும் போது திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த பெண் மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தையைப் பெற்றெடுத்து குழந்தையை கொன்றார்.
குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.