இமாலய பிரகடனம் கொண்டுவருவதற்கு நீங்கள் யார்? கிழித்தெறிந்த யாழ் மாணவன்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் கூட்டாக நிற்க வேண்டும் எனவும் தமிழ்மக்களினுடைய பிரச்சனைகள் என்னவென்று தெரியாமலே ஈழத்தில் உள்ளவர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதற்கு நீங்களே ஒரு பிரகடனத்தினை உருவாக்கி கொண்டுவருவதற்கு நீங்கள் யார் என யாழிலில் உள்ள ஒரு மாணவன் புலம்பெயர் தமிழர்களினைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையில் சொல்லாடல் என்னும் விவாத நிகழ்ச்சி ஒன்று யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றிந்தது.
எம்மவர்களின் புலம்பெயர் உறவுகளால் ஈழத்தமிழ் அரசியலுக்குப் பெரிதும் விளைவது சாதகமே , இல்லை என்ற சொல்லாடல் விவாதத்தில் கலந்து கொண்டு விவாதித்த வேளையிலேயே யாழ் இந்துக்கல்லூரி மாணவன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
புலம்பெயர் தமிழர்களுக்குக்குள் பல்வேறு பிரிவுகள் இருப்பதாகவும், அவர்கள் ஒற்றையாட்சியின் கீழ் ஒருமித்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முட்டை உள்ளிருந்து உடைந்தால் ஜனனம் வெளியிலிருந்து உடைந்தால் மரணம்.நீங்கள் எங்களுடைய தமிழ்தேசியக் கனவுகளையும் அபிலாசைகளையும் இலக்குகளை போற்றிப் பாதுகாக்க வேண்டிய நீங்களே அதை உடைத்து சிதைக்காதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை இதில் நடுவராகக் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான ச.லலீசன் கலந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துக்களை தூண்டி விடுவதாக லலீசன் மீது புலனாய்வுப் பிரிவு தெரிவித்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



