வடக்கு மக்களுக்கு பாரிய அளவிலான தேவைகள் உள்ளன! ஆளுநர்

#SriLanka #NorthernProvince #Governor
Mayoorikka
1 year ago
வடக்கு  மக்களுக்கு பாரிய அளவிலான தேவைகள் உள்ளன! ஆளுநர்

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

 இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் போலியோ தடுப்பு மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டசிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.

 அத்துடன் வசதிகள் இல்லாத மாணவர்கள் பாடசாலை கல்வியை தவிர்த்து வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் கற்றல் வசதிகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு ரோட்டரி கழகம் உதவ முன்வந்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, கல்வியால் முழு சமூக கட்டமைப்பையும் மாற்ற முடியும் என ஆளுநர் கூறியுள்ளார். 

இதேவேளை, நாட்டின் வட முனையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை உள்ளதாகவும், அதற்கான சிறிய செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் வடக்கு மாகாண கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!